ஈரோடு:கர்நாடக தலைநகர் பெங்களூரை அடுத்த பொம்ம சந்திரா பகுதியைச் சேர்ந்தவர் ஏதுபதி. இவர் தனக்கு சொந்தமான லாரியை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு (ஜூலை 28) அவரது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி திருடுபோனது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி போலீசாரிடம் ஏதுபதி நேற்று (ஜூலை 29) புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கர்நாடக போலீசார் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவின் மூலம் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
அப்போது, வாகனம் தமிழ்நாடு வழியாக ஈரோடு மாவட்டம் சித்தோடு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்புகொண்டு, இதுகுறித்து கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் ஈரோடு போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று லாரியை மீட்டனர். அப்போது லாரியில் யாரும் இல்லை. இதுகுறித்து விசாரிக்கையில், இன்று (ஜூலை 30) அதிகாலையில் இரண்டு நபர்கள் லாரியை இங்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரி சித்தோடு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. அதன் உரிமையாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வெளிநாடுகளில் சூதாட்டம் - சிக்கோட்டி பிரவீன் உள்ளிட்ட 5 பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்