தஞ்சாவூர்: திருவையாறு அருகே தகராறில் பீர் பாட்டில் கையை குத்தி கிழித்ததில் லாரி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவையாறு அடுத்த பள்ளியக்ரஹாரம் அருகேயுள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்த தண்டாயுதபாணி மகன் சுதாகர் (என்ற) ராமலிங்கம் (40). இவருக்கு திருமணமாகி முத்துலெட்சுமி (35) என்ற மனைவியும், ஜெகதீசன்(15) என்ற மகனும், வர்ஷா(12) என்ற மகளும் உள்ளனர்.
ராமலிங்கம் லாரி ஓட்டுநராக வேலை பார்த்துவருகிறார். பள்ளியக்ரஹாரம் பைபாஸ் டாஸ்மார்க் கடை உள்ளது. அந்தக் கடைக்கு செல்லும் சாலை மழையினால் சேறும் சகதியுமாக உள்ளது. இதையடுத்து, டாஸ்மார்க்கில் பார் நடத்துபவர் ராமலிங்கத்திடம் மணல் அடிக்க சொல்லி கூறியுள்ளார். ராமலிங்கம் தஞ்சை அன்னை சத்யா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரகுவரன் என்பவரிடம் மணல் அடிக்க சொல்லி உள்ளார்.
அவர் லாரியில் டாஸ்மார்க் கடைக்கு செல்லும் சாலையில் மணல் அடித்துள்ளார். அதற்கான கூலியை வாங்கிகொண்டுவந்த ராமலிங்கம் ரகுவரனிடம் கொடுத்துள்ளார். பணம் குறைவாக கொடுத்திருக்கிறாயே என்று ராமலிங்கத்திடம் ரகுவரன் கேட்டு தகராறு செய்துள்ளார்.