தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

கசந்த பிறந்தநாள் பார்ட்டி- ஆண் நண்பருடன் சண்டை- லிப்ட் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! - பாலியல் வன்புணர்வு

லிப்ட் கேட்ட இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த மூவரை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.

crime in jaipur  crime in rajasthan  gang rape with girl  gang rape in jaipur  gang rape on the pretext of giving lift  கூட்டு பாலியல் வன்புணர்வு  லிப்ட்  பாலியல் வன்புணர்வு
crime in jaipur crime in rajasthan gang rape with girl gang rape in jaipur gang rape on the pretext of giving lift கூட்டு பாலியல் வன்புணர்வு லிப்ட் பாலியல் வன்புணர்வு

By

Published : Jun 7, 2021, 9:26 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் மூன்று பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள பங்குரோட்டா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பிறந்தநாள் விருந்து ஒன்று நடந்துள்ளது. இதில் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பெண் அங்கிருந்து தனியாக வீடு திரும்பினார்.

அப்போது அவருக்கு வாகனம் ஒன்றில் வந்த மூன்று பேர் லிப்ட் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவரை வாகனத்திற்குள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காவல் உயர் அலுவலர் பிரதீப் மோகன் சர்மா பேட்டி

இது குறித்து காவல் உயர் அலுவலர் பிரதீப் மோகன் சர்மா கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் நடந்துவந்த பகுதிகள் மற்றும் வாகனம் சென்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்படுகின்றன” என்றார்.

இதையும் படிங்க: செயின்ட் ஜார்ஜ் பள்ளி மீதான பாலியல் புகாரின் விசாரணை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details