தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

அரசு பேருந்து மோதி காவலர் பலி - சூளைமேடு

சென்னை: இருச்சக்கர வாகனத்தில் சென்ற காவலர் மீது அரசு பேருந்து மோதிய நிலையில், சிகிச்சைப் பலனின்றி காவலர் பலியானார்.

அரசு பேருந்து மோதி காவலர் பலி.
அரசு பேருந்து மோதி காவலர் பலி.

By

Published : Mar 10, 2021, 10:58 AM IST

சென்னை, சூளைமேடு, அவ்வை நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (40), வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிப்புரிந்து வந்தார். முன்னதாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாக அவர் விடுப்பில் இருந்தார். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி மீண்டும் பணிக்குத் திரும்புவதற்காக தனது இருசக்கர வாகனத்தில், 100அடி ரோடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாதார விதமாக எதிரே வந்த அரசு பேருந்து அவர் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெயக்குமாருக்கு இரண்டு கால்கள் மற்றும் தலையில் பலத்த காயமடைந்ததையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அவரது காலில் அறுவை சிகிச்சை செய்த பின்பும் ரத்தம் தொடர்ந்து வெளியேறி வந்த நிலையில், நேற்றிரவு (மார்ச்.09) ஜெயக்குமார் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனையும் படிங்க:தனியாகச் சென்ற பெண்ணிடம் நகையைக் கொள்ளையடித்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details