தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

”ஓசி டிக்கெட் தானே” நீ பஸ்ல உக்கார கூடாது...தரக்குறைவாக பேசிய நடத்துநர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் - நடத்துநர்

ஈரோட்டில் தரக்குறைவாக பேசிய நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலைக்கழிப்பதாக பெண் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

ஓசி டிக்கெட் தானே நீ பஸ்ல உக்கார கூடாது...பெண்ணிடம் தரக்குறைவாக பேசிய நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்
ஓசி டிக்கெட் தானே நீ பஸ்ல உக்கார கூடாது...பெண்ணிடம் தரக்குறைவாக பேசிய நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்

By

Published : Sep 6, 2022, 9:35 AM IST

ஈரோடு: சாஸ்திரி நகரில் சுரேஷ்குமார் - கௌசல்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். தனியார் பள்ளியில் ஆசிரியரான இவர் நேற்று சாஸ்திரி நகரில் இருந்து பி.எஸ் பார்க் செல்ல அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். தனது கைக்குழந்தையுடன் நிற்க முடியாத கௌசல்யா பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்துள்ளார்.

ஓசி டிக்கெட் தானே நீ பஸ்ல உக்கார கூடாது...பெண்ணிடம் தரக்குறைவாக பேசிய நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்

இதற்கு நடத்துநர் செந்தில்குமார், ஆண்கள் இருக்கையில் அமரக்கூடாது எழுந்திருக்க சொன்னதாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த கௌசல்யாவை, ஓசியில் வரும் நீங்கள் அடுத்த பேருந்தில் அமர்ந்து வரவேண்டியது தானே என தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் பணியின் போது கவனக்குறைவாக செல்போனில் நடத்துனர் பேசி வந்துள்ளார்.

இதுகுறித்து எஸ்பி அலுவலகத்தில் தெரிவித்து தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் பல மணி நேரமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தம்பதியினரை அலைக்கழித்ததாகவும் இதனால் நியாயம் கேட்டு தம்பதியினர் எஸ்பி அலுவலகத்திலேயே தஞ்சம் அடைந்தனர்.

அரசு பெண்களின் நலன் கருதி பேருந்தில் இலவச பயணம் அறிவித்திருக்கும் நிலையில் தொடர்ச்சியாக பெண் பயணிகளை தரக்குறைவாக பேருந்து ஊழியர்கள் பேசுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஈரோடு சிறுமியின் கருமுட்டை விவகாரத்தில் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை பாய வாய்ப்பு..

ABOUT THE AUTHOR

...view details