தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

கோவில்பட்டி அருகே கபடி போட்டி நடத்தியதில் தகராறு; நான்கு பேர் கைது... - இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்

கோவில்பட்டி அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கபடிப் போட்டி நடத்தியதில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இருதரப்பைச்சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவில்பட்டி அருகே கபடி போட்டி நடத்தியதில் தகராறு
கோவில்பட்டி அருகே கபடி போட்டி நடத்தியதில் தகராறு

By

Published : Oct 13, 2022, 12:51 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே தாப்பாத்தியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. அங்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கபடி போட்டி நடைபெற்றது.

அப்போது முகாமைச்சேர்ந்த குகன் என்பவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். போட்டி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முகாமைச்சேர்ந்த சுதாகர் என்பவர் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குகன், தனது தம்பி தாஸ் மற்றும் நண்பர்களுடன் சுதாகர் வீட்டுக்குச்சென்று அங்கு அவரது வீட்டில் இருந்த குழந்தைகள், பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சுதாகர் உறவினர்கள் குகனையும் அவரது நண்பர்கள் சிலரையும் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், சுதாகரனின் மனைவி சகாயராணி, மாசார்பட்டி காவல் நிலையத்தில் அளித்தப்புகாரின் பேரில் குகன், அவரது தம்பி தாஸ் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குகன், தாஸ் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டி அருகே கபடி போட்டி நடத்தியதில் தகராறு

இதையும் படிங்க:திருநங்கைகளை இளைஞர்கள் துன்புறுத்தும் காணொலி; குற்றவாளிகள் கைது

ABOUT THE AUTHOR

...view details