தேனி மாவட்டம் கூடலூர் வெட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் ரவிக்குமார் கூலி வேலைக்கு சென்று வருகிறார். ரவிக்குமார் நான்கு நாட்களுக்கு முன்பு தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டார். அதன்பின் நேற்றிரவு தான் வேலை செய்த கோழிக்கறி கடைக்கு சென்று நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து அவரது நண்பர்கள் கோழிக்கறி கடைக்கு சொந்தமான குடோனில் ரவிக்குமார் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
காதல் திருமணமான நான்கு நாட்களில் இளைஞர் மரணம் - மரணத்தில் மர்மம்
தேனி மாவட்டம் கூடலூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட நான்கு நாட்களில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
காதல் திருமணமான நான்கு நாட்களில் வாலிபர் மர்ம மரணம்
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் ரவிக்குமாரின் பெற்றோர், மனைவி, நண்பர்கள், கோழிக்கடை உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அருவியில் குளித்த தலைமை காவலர் மூச்சுத் திணறி உயிரிழப்பு