திண்டுக்கல்: அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசாக வேலைபார்த்து வந்த தவமணி என்பவர் பணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் காக்கி பேண்ட் மட்டும் போட்டுக் கொண்டு உளவு பிரிவு காவலர் எனக் கூறி ஃபோன்-பே மூலம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.
ஆரம்பத்தில் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள், திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடி, மாவட்ட எல்லைச் சோதனைச்சாவடி பள்ளப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் வாகனச் சோதனை செய்யும்போது காவல் துறையினருக்கு கையூட்டு வாங்கிக் கொடுக்கும் கையாளாக செயல்பட்டுவந்த தவமணி, முறைக்கேடான தொழில் செய்பவர்களிடம் இருந்தும் காவல்துறையினருக்கு வசூல் செய்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கிடைக்கும் பணத்தில் காவல் அலுவலர்களுக்கு பங்கு
தினமும் வசூல் மூலம் பல ஆயிரங்கள் கையில் புழங்கினாலும் காவல் துறையினருக்கு பங்கு கொடுத்த பின்னர் தனக்கு 500 ரூபாயோ 1000 ரூபாயோ மட்டுமே கிடைத்ததால், காவலர்களுக்கே தெரியாமல் போன் பே மற்றும் கூகுல் பே போன்ற கைபேசிசெயலி வழியாக இணைய பணபரிவர்த்தனை மூலம் தனது கணக்கிற்கு நேரடியாக 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வசூல் செய்து வந்துள்ளார்.
இத்தகவல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே காவல் நிலைய ஆய்வாளருக்கு தெரிய வந்ததோடு அவர்களது மாத வசூல் பாதிப்படைந்ததால் தவமணியை காவல்நிலைய பகுதிகுள்ளே வரக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகின்றது.
தேர்தல் வந்ததும் ஆய்வாளர்களும், சில காவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து நீண்ட ஆண்டுகளாக அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரமிக்க காவலர்களின் உதவியோடு மீண்டும் களத்தில் குதித்த தவமணி பகிரங்கமாக செயலி மூலம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சிக்கியது எப்படி