தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி கடத்திய இளைஞர் கைது

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி கடத்திய இளைஞரை சுங்க அலுவலர்கள் கைதுசெய்தனர். அவரிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையம் வெளிநாட்டு கரன்சி கடத்தல் பறிமுதல் அப்துல் ரசாக் கைது foreign currency seized in chennai airport Euros worth 7 lakh seized from passenger's bag at Chennai Airport Chennai Airport Euros
சென்னை விமான நிலையம் வெளிநாட்டு கரன்சி கடத்தல் பறிமுதல் அப்துல் ரசாக் கைது foreign currency seized in chennai airport Euros worth 7 lakh seized from passenger's bag at Chennai Airport Chennai Airport Euros சென்னை விமான நிலையம் வெளிநாட்டு கரன்சி கடத்தல் பறிமுதல் அப்துல் ரசாக் கைது foreign currency seized in chennai airport Euros worth 7 lakh seized from passenger's bag at Chennai Airport Chennai Airport Euros

By

Published : Jan 19, 2021, 2:14 AM IST

சென்னை : சென்னை விமானநிலையத்தில் சுங்க அலுவலர்களால் கைது செய்யப்பட்ட இளைஞர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரிடம் சுங்க அலுவலர்கள் விசாரணை நடத்தினார்கள்.

சென்னையிலிருந்து துபாய்க்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு, திருவள்ளூரை சோ்ந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானம் திங்கள்கிழமை (ஜன.18) காலை புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்யவந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது திருவள்ளூரை சேர்ந்த அப்துல் ரசாக் (32) என்பவர் சிறப்பு அனுமதி பெற்று இந்த விமானத்தில் துபாய் செல்ல வந்திருந்தார்.

அவரை சோதனையிட்டபோது, உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த யூரோ வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு இந்திய மதிப்புக்கு ரூ.7 லட்சம் ஆகும். இதையடுத்து பயணியின் பயணத்தை ரத்து செய்த சுங்க அலுவலர்கள், அவரை கைது அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் கழிவறையில் ரூ.22 லட்சம் தங்கம் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details