தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினோறாம் வகுப்பு படித்து வரும் அவருடைய மகள், கரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் படித்து வந்துள்ளார்.
வழக்கம்போல் சிவக்குமார் பணிக்கு சென்றுவிட, அவருடைய மனைவி பக்கத்தில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவருடைய மகள் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.