கோயம்புத்தூர்: பேரூர் பகுதியில் அரசு உதவி பெறும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு. இவர் இளங்கலை பயிலும் மாணவி ஒருவரிடம் ஆபாசமாக சேட் செய்த டெலிகிராம் ஸ்கிரீன் ஷாட் பதிவுகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்களை காண்பித்து பேராசிரியர் திருநாவுக்கரசிடம் மாணவர்கள் விளக்கம் கேட்டபோது, முதலில் ஆசிரியர் மறுக்கவே ஆபாச சேட் குறித்த ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்களை மாணவர்கள் வெளியிட்டால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட விரிவுரையாளர் இந்த விஷயம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியவர, அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் கல்லூரி முன்பாக திரண்ட மாணவர்கள் பேராசிரியர் திருநாவுக்கரசை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் இருந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:’போலி உத்தரவுக்கு பணம் கொடுத்தவர்கள் புகார் அளியுங்கள்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்