தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கல்லூரி மாணவிக்கு மிரட்டல்; மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் - மர்மநபர்கள்

ஈரோட்டில் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் வெளியிடும் மர்மநபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கல்லூரி மாணவிக்கு மிரட்டல்; மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்
புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கல்லூரி மாணவிக்கு மிரட்டல்; மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்

By

Published : Sep 6, 2022, 10:42 AM IST

ஈரோடு:நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் ஈரோட்டில் தங்கி கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை மர்மநபர்கள் டெலிகிராம் எண்ணிற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அனுப்பி் உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாரின் அறிவுரைப்படி டெலிகிராம் செயலியை டெலிட் செய்துள்ளார்.

ஆனால் அதன் பின்னரும் அதைப்போன்ற மேலும் சில மார்பிங் படங்களை இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கும், பெற்றோர் மற்றும் நண்பர்களின் எண்ணிற்கும் மர்ம நபர்கள் அனுப்பி உள்ளனர். மேலும் குறிப்பிட்ட அந்த எண்களில் இருந்து வீடியோ கால் செய்து மாணவியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கல்லூரி மாணவிக்கு மிரட்டல்; மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்துள்ளார். அதில், பாலியல் ரீதியாக தனக்கு மிரட்டல் விடுப்பவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்களுக்கு சட்டரீதியான தண்டனை பெற்றுத்தரவும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க:”ஓசி டிக்கெட் தானே” நீ பஸ்ல உக்கார கூடாது...தரக்குறைவாக பேசிய நடத்துநர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்

ABOUT THE AUTHOR

...view details