கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நேற்று (மார்ச்.8) வந்த ஏர் அரேபியா விமானத்தில், தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் - coimbatore air port
கோயம்புத்தூர் விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்
அப்போது, விமானத்தில் வந்த முகமது யாசிர் என்ற பயணியிடமிருந்து 297 கிராம் தங்கமும், இர்ஃபான் என்பவரிடமிருந்து 296 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: போலீஸ் இன்ஃபார்மர் என நினைத்து இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்!