தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

புதுச்சேரி முதலமைச்சரின் பாதுகாவலர்களிடையே மோதல் - காவல்நிலையத்தில் புகார் - காவலரை தாக்கிய இன்ஸ்பெக்டர்

புதுச்சேரி முதலமைச்சரின் பாதுகாப்பு படையில் உள்ள காவலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தலைமைக் காவலரை தாக்கியதாக உதவி ஆய்வாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பாதுகாவலர்களிடையே மோதல்; காவலரை தாக்கிய இன்ஸ்பெக்டர்
முதலமைச்சரின் பாதுகாவலர்களிடையே மோதல்; காவலரை தாக்கிய இன்ஸ்பெக்டர்

By

Published : Aug 4, 2022, 11:07 AM IST

புதுச்சேரி:சட்டப்பேரவையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஐஆர்பிஎன் ஏட்டு செந்தில்குமார், முதலமைச்சர் ரங்கசாமியின் பாதுகாப்பு படையில் உள்ளார். நேற்று காலை முதல்வரின் இல்லத்தில் இருந்து அவரை அழைத்து வந்த பிறகு சட்டமன்ற பாதுகாப்பு அறையில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான காவல் ஆய்வாளர் ஜெயராமன், செந்தில்குமாரை அழைத்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது. ரத்த காயத்துடன் அவர் பொது மருத்துமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டு பெரியகடை காவல் நிலையம் வந்தார்.

அங்கு காவல் ஆய்வாளர் ஜெயராமன் தன்னை தாக்கி காயப்படுத்தி மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் தாக்கியதாக, தலைமை காவலர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:சாவர்க்கரை தியாகியாக ஏற்க முடியாது - நாராயணசாமி

ABOUT THE AUTHOR

...view details