சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த தியாகராஜன் (35) - வினோதினி தம்பதிக்கு நீண்ட ஆண்டுகளாக குழந்தை இல்லை. தியாகராஜன் ஓட்டேரியில் சொந்தமாக சலூன் கடை நடத்திவருகின்றார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கிப்போன தியாகராஜன், தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ஆறு லட்சம் ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
வாங்கிய கடனை அடைப்பதற்காக பெற்றோர் வீட்டை விற்று கடனை கட்டியுள்ளனர். ஆனாலும் தியாகராஜன் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்தார். இதனால் இவர் நடத்திவந்த சலூன் கடை, உணவுக்கடை அனைத்திலும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மீண்டும் தனியார் நிறுவனங்களில் ஐந்து லட்ச ரூபாய் கடனை வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தக்கோரி நிதி நிறுவனங்கள் தியாகராஜனை தொல்லை கொடுத்துவந்துள்ளன.
மேலும், வட்டிக்கு மேல் வட்டிபோட்டு 13 லட்சம் ரூபாய் வரை கடன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால், தியாகராஜன் மனமுடைந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் (பிப். 2) இரவு அவரது இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலைப் பிடித்துக்கொண்டு வந்து கதவை அடைத்து தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
தியாகராஜனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். 90 விழுக்காடு காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு (பிப். 3) உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதனைத் தடைசெய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...ரம்மி விளையாட்டில் பணம் இழந்தவரின் சோக முடிவு! கடைசி நிமிடத்தில் மனைவிக்கு அனுப்பிய ஒலிப்பதிவு!