தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சென்னை நகைக்கடையில் அரங்கேறிய துணிகர கொள்ளை: ஆந்திரா விரைந்தது தனிப்படை - ஊத்துக்கோட்டை வழியாக தப்பியோட்டம்

சென்னை நகைக்கடையில் ஷட்டரை துளை போட்டு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், கொள்ளையர்கள் போலி பதிவெண் கொண்ட காரை பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.

சென்னை நகைக்கடை
சென்னை நகைக்கடை

By

Published : Feb 12, 2023, 3:03 PM IST

சென்னை:பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள நகைக்கடையில், நேற்று முன்தினம் (பிப்.10) துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறியது. வெல்டிங் இயந்திரத்தால் நகைக் கடையின் ஷட்டரை துளையிட்ட கொள்ளையர்கள் 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைர நகைககளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நகைக்கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரனின் மகன் ஸ்ரீதர், திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கொள்ளையர்களைப் பிடிக்க 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நள்ளிரவில் கொள்ளை: இதற்கிடையே, சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், நள்ளிரவு 2 மணிக்கு காரில் வந்த கொள்ளையர்கள், 5 கிலோ சிலிண்டருடன் நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் இயந்திரத்தால் வெட்டி எடுத்துள்ளனர். பின்னர் நகைகளை கொள்ளையடித்துவிட்டு, 4 பேரும் காரில் ஏறி தப்பிச்சென்றதும் கண்டறியப்பட்டுள்ளது.

போலி பதிவெண்: காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த இரண்டரை மணி நேரத்தில் பூந்தமல்லியை தாண்டி திருமழிசை, ஊத்துக்கோட்டை வழியாக கார் சென்றது தெரியவந்துள்ளது.

ஆனால், அதன்பிறகு காரின் பதிவெண் சிசிடிவி கேமராவில் பதிவாகவில்லை. பதிவெண் குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அது போலியானது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா விரையும் தனிப்படை: இந்நிலையில் கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் ஆதாரங்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் வரை கொள்ளை.. திருவண்ணாமலையில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details