தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட திருடுபோன 12 லட்சம் மதிப்பிலான செல்போன்கள்... - வழிபறி செய்யப்பட்ட செல்போன்களை

திருவள்ளூரில் 12 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மீட்டு உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட 12 லட்சம் மதிப்பிலான செல்போன்கள்...
உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட 12 லட்சம் மதிப்பிலான செல்போன்கள்...

By

Published : Oct 7, 2022, 11:00 PM IST

திருவள்ளூர்: கடந்த 10 மாதங்களாக திருடு போன, தொலைந்து போன, வழிபறி செய்யப்பட்ட செல்போன்களை மீட்க மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பிகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உரிய ஆவணங்கள் இன்று பயன்படுத்தப்பட்டு வந்த செல்போன்களை, ஐ.எம்.இ.ஐ நம்பர் எண் வைத்து டிரேஸ் செய்தனர்.

டிரேஸ் செய்யப்பட்ட செல்போன்களை அந்தந்த மாநில போலீசார் உதவியுடனும் மற்றும் செல்போன் பயன்படுத்திய நபர்களிடமிருந்து பேசி கொரியர் மூலமாகவும், நேரடியாகவும் கடந்த 10 மாதங்களில் போலீசார் மீட்டனர். சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மூலம் மீட்கப்பட்ட இந்த 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 360 செல்போன்களை அதனின் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சிபாஷ் கல்யாண் ஒப்படைத்தார்.

உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட 12 லட்சம் மதிப்பிலான செல்போன்கள்...

செல்போன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் மனோஜ் பிரபாகரன், தலைமை காவலர்கள் சிவா, மாதவன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். செல்போன்கள் வழிபறி செய்யப்பட்ட இந்த வழக்கில் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 3 வழக்குகளில் 5 குற்றவாளிகளை ஏற்கனவே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தாம்பரம் அருகே 92 சவரன் நகைகள் கொள்ளை வழக்கு: மேலும் ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details