தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த ஓட்டுநர் கைது - School girl raped in Puducherry

பதினான்கு வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்

Driver
Driver

By

Published : Sep 7, 2021, 6:19 AM IST

புதுச்சேரி நகர பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவருடைய பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஆறு வாரங்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர், இது குறித்து அவரிடம் கேட்டபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த சதீஷ் பெரியான் (31) என்பவர் மாணவியிடம் ஆசை வார்த்தி கூறி கடந்த மூன்று மாதமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சதீஷை கைது செய்தனர்.

அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளதால் ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு செல்லாமல் சிறுமி வீட்டில் தனிமையாக இருந்து போது போன் சார்ஜர் வாங்குவது போன்று அடிக்கடி சென்று மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக ஒப்பு கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சதீஷ் பெரியானை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கார் ஓட்டுனர் சதிஷூக்கு திருமணமாகி நான்கு வயதில் பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details