தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

நன்னடத்தை பிணை ரத்து: திருவல்லிக்கேணி பகுதியில் 11 பேருக்கு சிறை! - சென்னை

சென்னை: திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 11 குற்றவாளிகளின் நன்னடத்தை பிணை ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நன்னடத்தை பிணை ரத்து, சென்னை, பாண்டியன், ராஜேஷ், pandian, rajesh, chennai criminals
நன்னடத்தை பிணை ரத்து

By

Published : Aug 20, 2021, 11:52 AM IST

சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளின் விவரங்களை தரம் வாரியாகப் பிரித்து அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டு (2021) மட்டும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 211 குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நன்னடத்தை மீறல்

அதே போல, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பல முறை சிறைக்குச் சென்று பிணையில் வெளிவந்த நபர் திருந்தி வாழப்போவதாகவும், ’இனி குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன், மீறினால் கைது நடவடிக்கையில் ஈடுபடலாம்’ எனவும் ஓராண்டு நன்னடத்தை சான்றிதழில் கையெழுத்திட்டுச் செல்வது வழக்கம்.

ஆனால் ஓராண்டிற்குள் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டால் நன்னடத்தை பிணையை ரத்துசெய்து அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கலாம். அதன் பேரில், திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 11 சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நன்னடத்தை பிணை ரத்து செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

11 குற்றவாளிகள்

குறிப்பாக, சூளைமேடு காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜேஷ் (38), 107 குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி ஓராண்டு காலத்திற்கு நன்னடத்தை பிணையம் அளித்திருந்தார். ஆனால், பிணையை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டதால் 201 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேபோல், ஆயிரம் விளக்கு காவல் நிலைய குற்றவாளி பாண்டியன் (29) பிணையை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஆண்டு மட்டும் சூளைமேடு காவல் நிலையத்தில் ஆறு பேர், சிந்தாதிரிபேட்டையில் மூன்று பேர், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இரண்டு பேர் என மொத்தம் 11 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் நன்னடத்தை பிணை ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கஞ்சா விவகாரத்தால் திமுக பிரமுகரை வெட்டிய இளைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details