கன்னியாகுமரி:16 வயது சிறுவன், தனது மூத்த சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல உதவி எண்ணுக்குத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமாக இருப்பதாகவும், அவர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சிறுமியைப் பிடித்து விசாரித்தனர். அப்போது சிறுமியின் தந்தை சென்னையில் வேலை பார்ப்பதாகவும், தாயார் மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்தது.
இவருக்கு 16 வயதில் ஒரு தம்பி இருப்பதும் தெரியவந்தது. இந்தச் சிறுவன் தனது அக்காவான 17 வயது சிறுமியை கரோனா பொதுமுடக்கக் காலகட்டத்தில் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.