கடலூர்: கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இச்சூழலில், நேற்று (ஜூன் 8) முதல் புதுச்சேரியில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இதனை அறிந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மது பிரியர்கள் அங்கு படையெடுத்தனர்.

மேலும் சிலர் புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்களை இருச்சக்கர வாகனங்கள், கார் போன்றவற்றில் கடத்திச் சென்றனர். இதனைத் தடுக்க கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி, சாவடி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே வந்த காரை சோதனை செய்ததில் விலையுயர்ந்த மதுபான குப்பிகள், நெய்வேலி பகுதிக்கு கார் ஓட்டுநர் புகழேந்தி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து மது பானங்களையும், காரையும் பறிமுதல் செய்து மதுவிலக்கு காவல்துறையிடம் சாந்தி ஒப்படைத்தார்.
இதேபோன்று இருசக்கர வாகனத்தில் சிதம்பரத்திற்கு மதுபானம் கடத்திய புவனகிரியைச் சேர்ந்த தமிழரசன், தயாளன் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்தும் மது குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.