தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சென்னை சாலைகளில் தொடரும் பைக் சாகச அட்டூழியம்; பீதியில் பொதுமக்கள் - stoppy

சென்னையில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி, நள்ளிரவில் இளைஞர்கள் அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபடுவதால், பொதுமக்களுக்கும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை சாலைகளில் தொடரும் பைக்சாகச அட்டூழியம்; பீதியில் பொதுமக்கள்
சென்னை சாலைகளில் தொடரும் பைக்சாகச அட்டூழியம்; பீதியில் பொதுமக்கள்

By

Published : Sep 9, 2022, 3:07 PM IST

சென்னை: சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டுபவர்கள், வீலிங் செய்பவர்கள் மீது சென்னை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், இளைஞர்களின் இந்த அத்துமீறல் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரை நேற்று நள்ளிரவு ஆபத்தான முறையில் ஒரு இளைஞர் குழுவினர் அதிவேகமாக பைக் ஓட்டி வீலிங் செய்து வந்தனர். இது சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருந்தது.

அந்த குழுவில் ஒரு இளைஞர் அதிவேகமாக வெகு தூரத்திற்கு வீலிங் செய்தபடி வந்தார். இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே பைக் ரேஸ் மற்றும் வீலிங் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபடுவோர் மீது சென்னை மாநகரப் போக்குவரத்து போலீசார் கைது செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பைக் ரேஸில் ஈடுபடுவோரை அரசு மருத்துவமனையில் உள்ள ஆபத்தான பிரிவில் அவர்கள் ஒரு வாரம் வேலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சென்னை சாலைகளில் தொடரும் பைக் சாகச அட்டூழியம்; பீதியில் பொதுமக்கள்

இந்நிலையில் மீண்டும் சென்னையில் நள்ளிரவு நேரங்களில் பைக் ரேஸ் மற்றும் வீலிங்கில் இளைஞர்கள் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது. பாண்டி பஜார் போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் வீடியோ காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் இருசக்கர வாகனத்தின் பதிவு எண் ஆகியவற்றை வைத்து இளைஞர்களைத்தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு "மருதநாயகம்"

ABOUT THE AUTHOR

...view details