சேலம் மாவட்டம் நங்கவள்ளி கிழக்கு ரத வீதியை சேர்ந்தவர் பழனியப்பன்- சக்தி தம்பதியின் மகன் சுதர்சன்(22). இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2, குரூப் 3, குரூப்-4 ஆகிய அனைத்து தேர்வுகளும் எழுதி அனைத்து தேர்வுகளிலும் தோல்வி அடைந்துள்ளார்.
இதனால் மனமுடைந்து சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று (ஜன 23) வீட்டில் உணவருந்திவிட்டு இருசக்கர வாகனம் மூலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சுதர்சன், தான் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி பற்றவைக்க முயற்சித்துள்ளார்.
அப்போது அங்கு தோட்ட வேலை செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.