தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

குடும்ப தகராறு: நடுரோட்டில் ஒருவரை ஓட ஓட கத்தியால் குத்திய நபர் - tamilnadu news

புதுக்கோட்டை : குடும்ப தகராறில் நடுரோட்டில் ஒருவரை ஓட ஓட கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

family issue
குடும்ப தகராறு

By

Published : Apr 20, 2021, 7:22 PM IST

புதுக்கோட்டை பால நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரும் கீரனூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரும் உறவினர்கள்.
இரு குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், சுப்பிரமணியன் நேற்று (ஏப்.19) இரவு புதுக்கோட்டை பாலன்நகர் அருகே ரயில்வே கேட் பகுதியில் ஒரு கடையில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியனை குத்துவதற்கு முற்பட்டுள்ளார். அப்போது சுப்பிரமணியனுக்கு கையில் கத்திக்குத்து விழுந்தது. இதனையடுத்து அவர் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்.

கத்தியால் கொலை முயற்சி செய்த காட்சி

பின்னர் சண்முகமும் அவரை துரத்திக்கொண்டு ஓடினார். இதனைத்தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் கூச்சல் எழுப்பவே சண்முகம் தப்பியோடிவிட்டார். இதில் காயமடைந்த சுப்பிரமணியன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை தேடி வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை!

ABOUT THE AUTHOR

...view details