சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக சார்பில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் கசாலியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலராக உள்ள ஜெ.எம்.பஷீர் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் காணொலி தற்போது வெளியாகியுள்ளது. சேப்பாக்கம் தொகுதி தானா என உறுதி செய்து கொண்ட பின்னரே ,அங்கு உள்ள பெண் வாக்காளர்களுக்கு ஜெ.எம் பஷீர் பணம் வழங்குகிறார்.