தென்காசி: 2019ஆம் ஆண்டு தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை பங்கஜவல்லி வசித்து வருகிறார். இவரது வீட்டில் ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பங்கஜவல்லி வீட்டில் இருந்த சுமார் 16 சவரன் தங்க நகைகள் திருடு போனது, இது தொடர்பாக 2019ஆம் ஆண்டு தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் எந்த துப்பும் இல்லாம் இருந்து வந்தது. இவ்வழக்கில் குற்றவாளியாக சந்தேகப்படும் பெண் ஒருவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-ல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்து புகார் அளித்தவரும், காவல் துறையினரும் சந்தேகம் அடைந்துள்ளனர்.