தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

பள்ளியில் மது அருந்திய ஆசிரியை... கையும் களவுமாக பிடித்த கல்வி அலுவலர்... - பணிநீக்கம் செய்யப்பட்டார்

கர்நாடகா மாநிலத்தில் பள்ளியில் மது அருந்திவிட்டு மாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருந்த ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பள்ளியில் மது அருந்திய ஆசிரியை; கையும் களவுமாக பிடித்த கல்வி அலுவலர்
பள்ளியில் மது அருந்திய ஆசிரியை; கையும் களவுமாக பிடித்த கல்வி அலுவலர்

By

Published : Sep 9, 2022, 1:34 PM IST

தும்கூர்:கர்நாடகா மாநிலம்தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிக்கசாரங்கி தொடக்கப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் கங்கலக்சம்மா. இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார்.

அடிக்கடி மது அருந்திவிட்டு, பள்ளிக்கு செல்வதும், அங்கு மாணவர்கள், சக ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளார். இதனால் மாணவர்களின் பெற்றோர் அடிக்கடி ஆசிரியை கண்டித்தும் அறிவுரை வழங்கியும் வந்தனர்.

ஆனால் கங்கலக்சம்மா கேட்கவில்லை. இந்த நிலையில் பள்ளிக்கு பூட்டு போட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியில் மது அருந்திய ஆசிரியை... கையும் களவுமாக பிடித்த கல்வி அலுவலர்...

இதுகுறித்து அறிந்த வட்டார கல்வி அலுவலர் ஹனுமா நாயக் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு நடத்தினார். அப்போது அந்த ஆசிரியையின் மேஜை டிராயரில் மதுபாட்டில்கள் இருந்தன. அதனடிப்படையில் அவரை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:அஸ்ஸாமில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம்..! 4 பேர் கைது...

ABOUT THE AUTHOR

...view details