தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

முன்விரோதத்தில் சிறுவனை கழுத்தை நெரித்தவருக்கு சிறை

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக சிறுவனின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

By

Published : Jun 18, 2021, 11:10 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மேல மாப்படுகை தோப்பு தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் கணேசன் (50). தொழிலாளியான இவர், ஊராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அருகே சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுவனைத் தூக்கி கழுத்தை நெரித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. சிறுவனின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

சிறையிலடைப்பு

இதையடுத்து சிறுவனை விட்டுவிட்டு கணேசன் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கணேசனுக்கும், சிறுவனின் தந்தை குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. பின்னர் சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கருப்பட்டியில் கலப்படம்: பதுக்கி வைத்திருந்த 92 டன் சர்க்கரை பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details