திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நேதாஜி, நேற்று இரவு திகுவாபாளையத்திலிருந்து தும்பேரி பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார்.
அப்பொழுது திகுவாபாளையம் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் நேதாஜியிடம் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதுகுறித்து நேதாஜி தனது சகோதரரான பிரசாந்திடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கு சென்ற பிரசாந் அப்பகுதி இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த 7க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிரசாந்த்தை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பிரசாந்திற்கு மண்டை உடைந்தது. உடனடியாக அவரை மீட்ட அப்பகுதி மக்கள், சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.