தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி... - பள்ளத்தில் பாய்ந்த கார்

உளுந்தூர்பேட்டை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 20 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி...
20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி...

By

Published : Sep 26, 2022, 10:38 AM IST

Updated : Sep 26, 2022, 11:07 AM IST

கள்ளக்குறிச்சி: சென்னை ராயப்பேட்டை இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் ஏஜாஸ். இவருடைய மனைவிக்கு சேலத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதனை பார்க்க தனது குடும்பத்தினருடன் காரில் நேற்று சேலத்திற்கு சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

காரை ஏஜாஸ் ஓட்டி சென்றார். காரில் அவருடைய தாய் ஹமீம், தங்கை அம்ரின், சித்தி நமீம், அவருடைய மகள் சுபேதா ஆகிய ஐந்து பேர் சென்றுள்ளனர். கார் இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பு.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது தூக்க கலக்கத்தில் ஏஜாஸ் காரை பக்கவாட்டி தடுப்புக்கட்டையில் மோதியதில் அங்கிருந்து கார் சுமார் 20 அடி பள்ளத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஹமீம், அம்ரின், சுவேதா ஆகிய மூன்று பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரை ஓட்டி சென்ற ஏஜாஸ் மற்றும் அவருடைய சித்தி நவீம் ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தினால் உளுந்தூர்பேட்டை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடன் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறனர்.

இதையும் படிங்க:திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

Last Updated : Sep 26, 2022, 11:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details