ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தின் பனோரமா மலைப்பகுதியில் சட்டவிரோதமாக கிரிக்கெட் பந்தயம் நடத்தப்படுவதாக நேற்று (ஜூன் 13) காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
கிரிக்கெட் போட்டியில் பந்தயம்: 4 பேர் கைது - கிரிக்கெட் போட்டியில் பந்தயம்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் 2021 கிரிக்கெட் போட்டிகளில் சட்டவிரோதமாகப் பந்தயம் கட்டி விளையாடிய நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அங்கு சட்டவிரோதமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டியில் பந்தயம் கட்டி விளையாடிய ரவிக்குமார் (29), திம்மாரெட்டி தனுஞ்ஜெய் (34), பர்கெட் சிவாஜி (29), வீரபனெனி ராம்பாபு (43) ஆகியோரைக் கைது செய்தனர்.
மேலும், இரண்டு எல்சிடி தொலைக்காட்சி, இரண்டு மடிக்கணினிகள், மூன்று ஸ்மார்ட் போன்கள், ஐந்து கணக்குப் புத்தகங்கள், ஒரு தகவல் தொடர்பு பெட்டி, ஆயிரத்து 590 ரூபாய் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.