தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா வீச முயன்ற இளைஞர் கைது! - வேலுார் சிறைக்குள் கஞ்சா

வேலூர்: மத்திய சிறைக்குள் 45 கிராம் கஞ்சாவை வீச முயன்ற நபரை காவல் துறையினர் துரத்திப் பிடித்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

jail
jail

By

Published : Mar 2, 2021, 10:29 PM IST

வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ளது வேலூர் ஆண்கள் மத்திய சிறை. நேற்று (மார்ச் 1) இதன் சுற்றுச்சுவருக்கு அருகே உள்ள தென்னைமரத்தில் ஏறிய சிவசக்தி என்ற இளைஞர், சிறைக்குள் 45 கிராம் கஞ்சா பொட்டலத்தை வீச முயன்றுள்ளார்.

இந்நிலையில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர்கள் இதனைக் கண்டு சிவசக்தியை விரட்டிப் பிடித்து, மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து சிறைத் துறை சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பிடிபட்ட நபரையும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பாகாயம் காவல் துறையினர் மத்திய சிறையில் கஞ்சா வீச முயன்ற கன்சால்பேட்டையைச் சேர்ந்த சிவசக்தி (26) என்பவரை கைதுசெய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்த 45 கிராம் கஞ்சாவையும் பறிமுதல்செய்தனர்.

இதையும் படிங்க: அரியவகை நோயால் அவதிப்படும் குழந்தை: உதவிக்கரம் வேண்டும் பெற்றோர்!

ABOUT THE AUTHOR

...view details