வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பத்தா பேட்டை பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் நியாய விலைக்கடை அரிசியை ஒருவர் ஆந்திராவிற்கு கடத்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனையிட்டுக்கொண்டிருந்த வட்ட வழங்கல் அலுவலர் குமார் தலைமையிலான வருவாய் துறையினர் மடக்கி சோதனை செய்ய அருகில் சென்றபோது இருசக்கர வாகனத்தை விட்டு அந்த நபர் தப்பி ஓடினார்.
கடத்த முயன்ற 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்! - வாணியம்பாடி நியாய விலைக்கடை அரிசி கடத்தல்
வேலூர்: வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 200 கிலோ நியாய விலைக்கடை அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்துள்ளார்.

vellore supply officers seized 200 kg trafficking ration rice
இதையடுத்து அவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவர் கடத்த முயன்ற சுமார் 200 கிலோ நியாய விலைக்கடை அரிசியை கைப்பற்றினர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட அந்த நபர் குறித்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க:16 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது!
TAGGED:
vellore rice smuggling cases