வேலூர்: வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நேற்று (நவ 18) வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு பகுதியிலுள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசித்து வந்த இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர், பாதுகாப்பு காரணத்திற்காக அருகேயுள்ள அஜீசியா தெருவில் வசித்து வரும் ஹபீப் என்பவரது மாடி வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளனர்.
தொடர் மழையால் பலவீனமாக இருத்த அந்த கட்டடம் இன்று (நவ 19) காலைஇடிந்து விழுந்தது. கட்டட விபத்து காரணமாக இடிபாடுகளில் சிக்கி மன்னன், அப்ரார், தௌலத், மனுல்லாஹ், மிஷா ஃபாத்திமா, அனிஷா, ரூஹி, தன்சிலா, கௌசர் என 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கிய மீதமுள்ள 8 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு துறையினர் (National Disaster Response Force) ஈடுபட்டனர். அவர்கள், பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.