வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியில் வேலூர் மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த துணை மின் நிலையம் உள்ளது. இதில் திடீரென ஒருவர் சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து மடமடவென மின்மாற்றியில் ஏறினார் இதனை பார்த்த மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து வேலூர் நகர் முழுவதும் செல்லும் மின்சாரத்தை துண்டித்தார்கள்.
தகவலறிந்து பொதுமக்கள் அவரை கீழே இறங்கி வருமாறு கூறியும் அந்த நபர் கீழே இறங்க மறுத்துவிட்டார், பின்னர் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கும், வேலூர் வடக்கு காவல்துறையினரும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இறங்காததால் தீயணைப்புத்துறையினர் ஏணி மூலம் ஏறி அவரை பத்திரமாக மீட்டனர்.
மின்மாற்றியில் ஏறியதால் ஆங்காங்கே அவருக்கு காயம் ஏற்பட்டது,உடனடியாக மின் ஊழியர்கள் மின் விநியோகத்தை நிறுத்தியதால் அந்த நபர் உயிர் தப்பினார் இதனால் வேலூர் நகர் முழுவதும் ஒன்றரை மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
மின்மாற்றியில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி காவல்துறையினர் விசாரணையில், தற்கொலை மிரட்டல் விடுத்த நபர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த திகம்பர் சிங் என்றும் தன்னுடைய மாநிலத்திலிருந்து லாரியில் வந்ததாகவும் தன்னை இங்கே இறக்கி விட்டு லாரி சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் வேலூர் வடக்குக் காவல்துறையினர் அவரை அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் சேண்பாக்கம் துணை மின் நிலையம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.