வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடி காவல் நிலையத்தில் முன்பு சரத் (25) என்பவர் ஏப். 11ஆம் தேதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
இதையடுத்து சரத் ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சரத் தனது வாக்கு மூலத்தில், மேல்பாடி காவல் நிலைய காவலர்கள் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.