தமிழகத்தில் கரோனா நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசின் சார்பில் கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், முதற்கட்டமாக 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
கரோனா நிவாரணைத்தொகை வழங்கும் பணி தொடக்கம் இந்நிலையில், கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் நிவாரண தொகை வழங்கும் பணியை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கவுதம சிகாமணி, மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். கரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகளுடன் நாள்தோறும் 200 பேருக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படுகிறது.