வேலூர்: திருவலம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் 7 வயது சிறுமி. இவரது பெற்றோர் ஜன. 10ஆம் தேதி, காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த சிறுமி டி.வி பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டினுள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுமி அலறி கூச்சலிடவே சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்தவர் அங்கு வந்துள்ளார்.
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன் கைது! - போக்சோ
வேலூர் அருகே 7 வயது சிறுமிக்கு வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக 15 வயது சிறுவனை திருவலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறுவன் கைது
இதையடுத்து சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். இது குறித்து, சிறுமியின் தாய் திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த துணை ஆய்வாளர் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ரஷ்யருக்கு 18 ஆண்டுகள் சிறை...!