வேலூர்: பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த மருந்தாளுநரிடம் பாம்பு கடிக்கு மருந்து எடுத்துவரச்சொன்னார்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியன். பாம்பு கடிக்கு மருந்தில்லை, ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்திருந்தது, இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் முறையாக செயல்படவில்லை எனக் கூறி இரண்டு மருத்துவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
காட்பாடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அளித்த பேட்டியில், ”பொன்னை அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரியாக இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இங்கு பாம்புக்கடிக்கு கூட மருந்துகள் இல்லை. இதனால் நோயாளிகளை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 50 கிலோமீட்டர் தூரம் எடுத்துச்செல்லும் சூழல் உள்ளது. இதனால் வழியிலேயே நோயாளிகள் உயிரிழக்கின்றனர்.
இங்கு வந்த எக்ஸ்ரே கருவி சோளிங்கர் அருகேயுள்ள கொடைக்கல்லுக்கு எடுத்து செல்லப்பட்டதாக கூறுகிறீர்கள். கட்டடமும் பழுதடைந்துள்ளது, இதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி, பிரச்னைகள் ஏதும் இன்றி நடைபெற சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,