ராணிப்பேட்டை: சோளிங்கர் யோக நரசிம்மர் மலைக்கோயிலில் ரோப்கார் அமைக்கும் திட்ட செயல்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்த ரோப் கார் பணியினை மீண்டும் துரிதப்படுத்த நேற்று (ஜூன் 11) இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பணி தாமதமான காரணம் குறித்து கோயில் நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அறநிலை துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளார்களை சந்தித்த அவர், “இந்தாண்டு இறுதியில் ரோப்கார் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் இப்பகுதி சுற்றுலாத்தலமாக மற்ற உனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தமிழ்நாட்டில் பல்வேறு பழமையான கோயில்கள் இன்னும் குடமுழுக்கு செய்யாமல் இருகிறது என்ற செய்தியாளர் கேள்விக்கு, “தொல்லியல் துறை, இந்து அறநிலையத்துறை, நிதித்துறை குழு வாயிலாக இது போன்று குடழுழுக்கு செய்யப்படாத கோயில்களின் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அது முடிந்த பிறகு பெரிய கொயில்கள், வருமானம் குறைவாக உள்ள கோயில்கள் ஆகியவற்றில் குடமுழுக்கு செய்ய முதலமைச்சர் வெளியிடுவார்” என்று பதிலளித்தார். மேலும், “முதலமைச்சர் ஒருநாளைக்கு 20 மணி நேரம் பணியாற்றுவதாகவும் அமைச்சர்களான நாங்கள் குறிப்பாக அறநிலையத்துறை 18 மணி நேரம் பணியாற்றுகிறது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “இந்துசமய அறநிலையத்துறை வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறது. யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அரசியல் பேதமின்றி சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
“மலைப்பாதையில் செல்ல முடியாதவர்கள் டோளி மூலம் தூக்கி செல்லப்பட்டு வருகின்றனர். அந்த தொழிலாளர்களுக்கு ரோப்கார் அமைக்கும் பணி முடிந்த பின்னர் வேறு பணிகள் வழங்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.