வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சிவபிரகாசம் தலைமையில் வருவாய் துறையினர் சார்பில், உழவர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.
இந்தப் பொங்கல் விழாவில் வருவாய் துறை அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இவ்விழாவில் கிராம நிர்வாக அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வாணியம்பாடியில் சமத்துவ பொங்கல் விழா நாமக்கல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் முதன் முறையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து சிறப்பு பூஜைகள் செய்தார்.
பின்னர் பொங்கல் பொங்கியவுடன் ’பொங்கலோ பொங்கல்’ என குரலெழுப்பி அனைவரும் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
நாமக்கல்லில் சமத்துவ பொங்கல் விழா விருதுநகர்
தமிழர் திருநாளாம் தை பொங்கலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரியான அரசு கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து கொண்டாடினர்.
இவ்விழாவிற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக சார் பதிவாளர் சங்கர் நடேசன் தலைமை தாங்கி நடத்திவைத்தார். அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரி மாணவிகளுக்கிடையே கோலப்போட்டி நடைபெற்றது. சிறப்பான கோலம் வரைந்தவர்களுக்கு கல்லூரியின் சார்பில் பரிசு அளிக்கப்பட்டது.
கல்லூரி மாணவ, மாணவிகளின் உற்சாக நடனம் கல்லூரியில் செயல்படும் நான்கு துறைகளின் சார்பில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்தனர். இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய பறை இசை இசைக்கப்பட்டது. அப்போது மாணவ, மாணவிகளுடன் ஆடிப்பாடி உற்சாகமாக பொங்கலை கொண்டாடினர்.
இதையும் படிங்க: சமத்துவ பொங்கல் விழா: சிலம்பம் சுற்றி அசத்திய தாவணி பெண்கள்!