தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிட்காயினில் முதலீடு: தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை - வேலூர் அரசு மருத்துவமனை

பிட்காயினில் முதலீடு செய்து இழப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காவல்துறையினர் விசாரணை
காவல்துறையினர் விசாரணை

By

Published : Dec 7, 2021, 1:58 PM IST

வேலூர்:திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (34). தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், இவர் கிரிப்டோகரன்சியின் பிட்காயினில் முதலீடு செய்து பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இழப்பு ஏற்பட்டதால் முரளி கிருஷ்ணன் கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

இச்சூழலில், நேற்று (டிசம்பர் 6) இரவு சேண்பாக்கத்தில் அவர் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்துகொண்டார். அதன்பின் வேலூர் வடக்கு காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் பிட்காயினில் எவ்வளவு தொகை முதலீடு செய்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "இணையதளங்களில் இதுபோன்று ஏராளமாக உள்ளன.

தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள்

அவற்றில் அதிகளவில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டாம்" என அறிவுறுத்தியுள்ளனர்.

சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள்.

இதையும் படிங்க:வீட்டில் பிரசவம், குழந்தை உயிரிழப்பு : தாய் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details