வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற காமராஜர் நூற்றாண்டு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
அதில் பேசிய அவர், "எழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பார்க்க வேண்டிய பெயர் காமராஜர். அனைவருக்கும் கல்வி என்று காமராஜர் எண்ணி திட்டம் தீட்டினார். அப்படியாக்கப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டுமானது என ஒதுக்கப்படக் கூடாது.
மாணவர்களுக்கு கல்வி சென்றடைய காமராஜர் வழிசெய்தார், ஆனால் தற்போது நீட் தேர்வு எழுத மாணவர்கள் மற்ற மாநிலத்திற்கு செல்லும் நிலைமை ஏற்ப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பேச்சு தொடர்ந்து பேசிய கமல், "காந்தியின் பக்தன் அல்ல; நான் ரசிகன். இன்றைய 24 வயது இளைஞர்கள் காந்தியை பின்பற்றிவருகின்றனர். அவர்கள் அமைதி காத்துக்கொண்டிருக்கின்றனர். தேவைப்படும் நேரத்தில் அவர்கள் அனைவரும் வெகுகொண்டு எழுவார்கள்" எனக் கூறினார்.