தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிமெண்ட் கலவை இயந்திரத்தில் விழுந்து கட்டட தொழிலாளி பலி - ambur building construction

வேலூர்: கல்குவாரியில் சிமெண்ட் துகள்கள் கொட்டும் கலவை இயந்திரத்தில் கால்தவறி விழுந்த கட்டட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கட்டட ஊழியர் பலி

By

Published : Jun 9, 2019, 10:09 PM IST

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் காட்டுக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் பல ஆண்டுகளாக கட்டட பணி ஊழியராக வேலை செய்துவந்துள்ளார். இன்றும் வழக்கம்போல் தனது பணியில் ஈடுபட்டிருந்த அவர், லாரியின் மூலம் கொண்டு வந்த சிமெண்ட் துகள்களை அரைக்கும் கலவை இயந்திரத்தில் கொட்டி அரைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது இயந்திரத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

அந்நேரத்தில் வேலையாட்கள் யாரும் இல்லாத நிலையில், சாமிநாதனே அந்த இயந்திரத்தின் மீது ஏறி அடைப்பினை சரி செய்துள்ளார். அப்போது அவரின் கால் தவறி இயந்திரத்தின் உள்ளே விழுந்ததால் சுழன்று கொண்டிருந்த சிமெண்ட் துகள்கள் முழுவதும் சாமிநாதனின் மீது கலந்து மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பல மணி நேரமாக அவரை காணாமல் தேடிய சக ஊழியர்கள், எதேச்சையாக இயந்திரத்தின் மீது ஏறி பார்த்தப்போது, அங்கு சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details