தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓயாமல் அழுத குழந்தை! துப்பட்டாவால் அழுத்திக் கொன்ற தாய்! - வேலூரில் குழந்தையை கொன்ற தாய்

வேலூர்: குழந்தை தொடர்ந்து அழுததால் எரிச்சலடைந்த தாய் குழந்தையை துப்பட்டாவால் அழுத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூங்கமால் அழுத குழந்தை! துப்பட்டாவால் அமுக்கி கொன்ற தாய்!

By

Published : Nov 23, 2019, 2:37 PM IST


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் கௌரிசங்கர்(30), பவித்ரா (24 ) தம்பதி. இவர்களுக்கு ரம்யா(8), மௌனிகா(1 1/2 ) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கௌரி சங்கருக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமணம் மீறிய தொடர்பு ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கௌரி சங்கர் பவித்ராவை பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் தனியாக வசித்து வரும் பவித்ரா காஞ்சிபுரத்தில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய பவித்ரா, தனது இரண்டாவது குழந்தை தொடர்ந்து அழுத காரணத்தால் எரிச்சலடைந்து துப்பட்டாவால் முகத்தை மூடி அழுத்தியுள்ளார். இதனால் மூச்சுத் திணறி குழந்தை மௌனிகா பரிதாபமாக உயிரிழந்தது.

வேலூரில் குழந்தையை கொன்ற தாய்

பின்னர் அதிர்ச்சியடைந்த பவித்ரா குழந்தையை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தொடர்ந்து அழுது கொண்டிருந்த குழந்தை திடீரென மயக்கம் அடைந்துவிட்டதாக கூறி நாடகமாடி உள்ளார். சந்தேகமடைந்த மருத்துவர்கள் இது குறித்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கணவன் விட்டுச் சென்ற விரக்தியில் வாழ்ந்து வந்த தான் வேலை பளு காரணமாக எரிச்சலுடன் வீடு திரும்பியபோது குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு அதிக எரிச்சலடைந்து முகத்தை முடியாததாகவும் இதனால் குழந்தை இறந்து விட்டதாகவும் தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:

குஞ்சுக்கு உணவளிக்கும் தாய்பறவை: இணையத்தில் வைரலான புகைப்படம்

ABOUT THE AUTHOR

...view details