வேலூர்:தமிழ்நாட்டில் முழுவதும் 34ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அந்த வகையில் வேலூர் சத்துவாச்சாரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 'கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேலூர் மாவட்டம் தன்னிறைவு பெற்றதைத் தொடர்ந்து, பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று 952 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. தடுப்பூசிகள் கையிருப்பாக 27 லட்சம் உள்ளநிலையில், மேலும் 3.50 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதை இலக்காக கொண்டுள்ளோம். இந்த வாரம் நானும் சுகாதாரத்துறை செயலாளரும், டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள், கோவை புதிய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டத்துக்கு புதிய மருத்துவக்கல்லூரிகள், கூடுதல் கரோனஆ தடுப்பூசி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம்.