வேலூர்:மாங்காய் மண்டி பகுதியில் இந்தியக் குடியரசுக் கட்சியின் சார்பில் சமூகநீதி மாநாடு நேற்று (நவம்பர் 24) நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சருமான ராம்தாஸ் அதவாலே சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முன்னதாக அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் பட்டியலினத்தவரை ஆதரிக்க வேண்டும். அவர்களுக்கு எதிரான அநீதிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
பட்டியலின குடும்பங்களுக்கு தலா 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் மேலும் இவர்கள் பொருளாதார நிலையில் முன்னேறவும், சமூகத்தில் சம நிலைக்கு வரவும் பட்டியலின குடும்பங்களுக்கு தலா ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வேண்டும். இந்த நிலத்தில் அவர்கள் விவசாயம் செய்து சமூகத்தில் சம நிலையை அடையலாம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் கலப்புத் திருமணத்தை ஆதரிக்க வேண்டும். கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும்விதமாக மத்திய அரசு கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்துவருகிறது. இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கலப்புத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:School Leave : 18 மாவட்டங்களில் மழை - பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!