தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Smart City பணிகள் ஏனோ தானோ என்று நடந்துள்ளன: நானே வீதி வீதியாகச் சென்று ஆய்வு செய்வேன் - துரைமுருகன் எச்சரிக்கை

வேலூர் மாநகராட்சியில் ஒரு தெரு கூட சேறு, சகதி இல்லாமல் இல்லை. முதலில் குழியைத் தோண்டுவது, பின்னர் ரோடு போடுவது, பிறகு மீண்டும் தோண்டுவது என ஏனோ தானோ என்று பணிகள் நடந்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Smart City பணிகள் ஏனோ தானோ என்று நடந்துள்ளன
Smart City பணிகள் ஏனோ தானோ என்று நடந்துள்ளன

By

Published : Nov 30, 2021, 8:51 PM IST

வேலூர்:மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்மிகு நகர திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று (நவ.30) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், சீர்மிகு நகர திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டியது குறித்து ஆலோசனைகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "வேலூரில் சீர்மிகு நகர திட்ட பணிகள் முடிவடைந்து இருக்க வேண்டும். ஆனால், தற்போது 70 விழுக்காடு பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. ஒப்பந்ததாரர்கள் சரியாக வேலை செய்யாததால் பணிகள் நிறைவடையாமல் உள்ளன.

சீர்மிகு நகர திட்ட பணிகள் குறித்து துரைமுருகன் ஆலோசனை

அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி

ஒப்பந்தம் எடுத்த எல்&டி (L&T) நிறுவனம் வேறு நிறுவனங்களுக்கு அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி துணை ஒப்பந்தம்(Sub - contract) அளித்துள்ளனர். இதனால், வேலூர் மாநகராட்சியில் ஒரு தெரு கூட சேறு, சகதி இல்லாமல் இல்லை. முதலில் குழியைத் தோண்டுவது பின்னர் ரோடு போடுவது, பிறகு மீண்டும் தோண்டுவது என ஏனோ தானோ என்று பணிகள் நடந்துள்ளன.

நானே நேரில் சென்று பார்த்தேன், எங்களுடைய வி.ஜி ராவ் நகர் பகுதியில் நடக்க முடியவில்லை. இப்படி இருந்தால் என்ன செய்வது என்று தான் உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். பணிகளை முடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர்

மேலும், வரும் 12ஆம் தேதி மாநகராட்சி பகுதியில் வீதி வீதியாகச் சென்று ஆய்வு செய்ய உள்ளோம். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க முடியாது என கூறினார்கள். ஆனால், அதனையும் மீறி 142 அடி தண்ணீரை நிரப்பிக் காட்டியுள்ளோம்" என்றார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எ.பி. நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆளும்வர்க்கத்தை அடி வெளுத்து வாங்கும் 'மாநாடு' - சீமான் புகழாரம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details