இதில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான காட்சி ஊடகங்கள், வேலூரில் ஒளிபரப்பாகக் கூடிய உள்ளூர் காட்சி ஊடகங்கள் ஆகியவை 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. மொத்தம் 9 பேர் சுழற்சி முறையில் இதை கண்காணித்து வருகின்றனர். இதற்கான அறிக்கையை வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவரிடம் ஒப்படைக்கின்றனர்.
தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஊடக மையம் : வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு - ஊடக மையம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வேலூர் : மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தலுக்கான ஊடக மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஊடக மையம் : வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
2021 சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இந்நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் செய்யக்கூடிய செலவிற்கு கணக்கு காட்ட வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதிமுறை. அதனடிப்படையில் காட்சி ஊடகங்களில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரேனும் முன் அனுமதியின்றி தேர்தல் செலவை மறைக்கும் நோக்கில் விளம்பரம் செய்கின்றனரா என்பதையும், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் உள்ளூர் நிகழ்வுகள், அரசுக்கு எதிரான செய்திகள் ஆகியவற்றை கண்காணிக்கும் வண்ணம், நான்கு எல். இ. டி டிவியுடன் கூடிய தேர்தலுக்கான பிரத்யேக ஊடக மைய அறை ஒன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நான்காவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு அறையை நேற்று (மார்ச்2) வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது நான்கு டிவிகளுடன் கண்காணித்தால் சிரமமாக இருக்கக்கூடுமென கூடுதலாக மூன்று டிவிக்கள் வைத்து கண்காணிக்கும்படி அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:ரூ.50 தர முடியுமா.. முடியாதா? நகைக் கடைக்காரரிடம் லந்து செய்த குடிகாரர்!