வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஜலால்பள்ளம் பகுதியில் வசிக்கும் அலி என்பவர் பேக்கரி நடத்திவருகிறார்.
இவரது வீட்டில் நேற்று அவர் மகள் சுமையா மட்டும் தனியாக இருந்த நிலையில், இரவு 9 மணி அளவில் வீட்டின் பின்புறம் நுழைந்த வடமாநில இளைஞர் ஒருவர், சுமையாவின் வாயை பொத்தி பணம் நகையை கொள்ளையடிக்க முற்பட்டபோது, சுமையா கூச்சலிட்டுள்ளார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் நுழைந்து அந்த வடமாநில இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கி, காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
வேலூரில் வீடு புகுந்து திருட முயன்ற வட மாநில இளைஞர் கைது சம்பவ நடப்பதற்கு முன்பாகவே அலி வசிக்கும் தெருவில் கம்பளி விற்பதற்கு அந்த வடமாநில இளைஞர் வந்ததாக அப்பகுதி மக்கள் காவலர்களிடம் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.